காரில் இருந்த ரூ. 3 லட்சம் நகை திருட்டு
கோவை:
கோவையில் காரில் வைத்திருந்த நகைப் பெட்டியுடன் ரூ. 3லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை ராம்நகர் சரோஜினி வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35). இவர் தனது மனைவி சுகுணாவுடன் காரில் திண்டுக்கல் சென்றார். அப்போது வீட்டில்இருந்த நகைகளை ஒரு பெட்டியில் எடுத்து காரில் வைத்துக் கொண்டனர். இந்தப் பெட்டியில் 41 பவுன் நகை இருந்தது.
திண்டுக்கல்லில் தங்களது உறவினர்களைப் பார்த்து விட்டு மீண்டும் கோவை திரும்பினர். கோவை திரும்பியவுடன், காரில் இருந்த நகைப் பெட்டியை எடுக்கமறந்து விட்டனர்.
நகைப் பெட்டி இருந்த கார் நன்கு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் இரவு அவர்கள் வீட்டில் தூங்கி எழுந்தனர். காலையில் நகைப் பெட்டி நினைவு வந்தவுடன்காருக்குச் சென்று பார்த்தனர். அப்போது காரின் கதவு நூதனமுறையில் திறக்கப்பட்டு நகைப் பெட்டி திருடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட இருவரும்அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications