அருணாச்சல பிரதேசத்தில் சீன ஊடுறுவல் அதிகரிப்பு
இட்டாநகர்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்வதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் முகுத் மித்தி இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா, சீனா இடையே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக பெரும்பாலான சீன மக்கள்அருணாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைகின்றனர். 1962 ம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர்நடந்தது. அதற்குப்பின் அப்பகுதி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 14 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்தியா, சீன எல்லைப்பகுதியில்உள்ளது. இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையும் தாண்டி சீன மக்கள் அருணாசல பிரதேசத்திற்குள் புகுந்துவிடுகிறார்கள். இதுகுறித்து நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சகத்திடமும் புகார் கூறிவிட்டோம்.
நாளுக்குநாள் இந்தியாவுக்குள், சீனர்கள் நுழைவது அதிகரித்து வருகிறது. விடுகின்றனர். இப்பகுதிகளில் இந்தியராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் இது போதாது. பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்.
ஊடுறுவலைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு விரைவில் சுமூக தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்றார் முதல்வர் முதல்வர் முகத் மித்தி.
சீன ஊடுறுவல் தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அருணாச்சலபிரதேசத்திற்கு சென்று விசாரித்துள்ளார். இந்த வருடம் மட்டும் இரண்டு முறை பெர்னாண்டஸ் அருணாச்சலப்பிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் அப்பகுதியில்வசிக்கும் பழங்குடி மக்களிடம் சீன ராணுவ வீரர்களிடமிருந்து மிரட்டல்கள் இருக்கிறதா என்பது குறித்து கேட்டார்.அதற்கு, சீன ராணுவ வீரர்கள் சில நேரம் துன்புறுத்துவதாகவும், சிறு, சிறு மோதல்கள் அவ்வப்போதுஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications