மக்களைத் திரட்டிப் போராடுவோம் .. கம்யூ. எச்சரிக்கை
சென்னை:
ஜனநாயகத்திற்கு விரோதமான அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.இல்லையேல் மக்களை திரட்டி மாபெரும் இயக்கம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மார்க்சிஸ்ட் செயலாளர் என்.சங்கரய்யா வெளியிட்டுள்ளஅறிக்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில்இரு நாட்கள் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வீரய்யன் தலைமையில் நடந்தகூட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் கே. வரதராசன், மத்தியக் குழுஉறுப்பினர்கள் என்.வரதராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து கூட்டு இயக்கம் நடத்துவது எனஇந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்துதமிழகத்தில் இடதுசாரி , ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து வலுவானமக்கள் இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள், ஜனநாயக இயக்கங்கள் மீதான தாக்குதல்கள்அதிகரித்து வருகின்றன. இவ்வாறு தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு ஜனநாயகஇயக்கங்களை முடமாக்கும் நோக்குடன் அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டுதொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சென்னை மற்றும் பெருநகர்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தர்ணா போன்றஇயக்கங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பற்றிபத்திரிகை, தொலைக்காட்சியில் அதிருப்தி தெரிவித்து கருத்து தெரிவித்தால்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு மிரட்டுகிறது. இது அரசியல் சட்டஅடிப்படை உரிமையை மறுப்பதாகும்.
அந்த சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், சங்க நிர்வாகிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசுசுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது பல லட்சம் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாட்டை நசுக்கும் ஜனநாயக விரோதசெயல் ஆகும்.
ஜனநாயக இயக்கங்கள், போராட்ட நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகளுக்குஎதிராக தமிழக அரசு தொடுத்துள்ள அடக்குமுறை, காவல்துறை நடவடிக்கைகளைஉடனே தமிழக அரசு கைவிட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் தொடருமேயானால் அதை எதிர்கொண்டு முறியடிக்கஓரணியில் திரண்டு களம் இறங்க முன் வர வேண்டுமென்று தமிழக மக்களையும்,அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது என்றுசங்கரய்யா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications