வாஜ்பாய்க்கு "பிசியோதெரபி பயிற்சிகள் துவங்கின
மும்பை:
பிரதமர் வாஜ்பாயுக்கு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆகிறது.அவர் இப்போது பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரதமருக்கு இடது காலில் வலி அதிகமாக இருந்ததால் மாற்று மூட்டு அறுவை சிகிச்சைசெய்யபப்ட்டது. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இபபோது அவர் முதற்கட்டபிசியோதெரபி பயிற்சிகளை செய்ய தயாராகி வருகிறார்.
பிரதமர் வாஜ்பாயுக்கு இடது காலில் வயோதிகம் காரணமாக ஆஸ்டியோஆர்த்தரைடிஸ் வந்தது. அவருக்கு வரும் டிசம்பர் மாதம் 76 வயதாகிறது.
காலில் உள்ள திசுக்களும், காலின் கீழ் பகுதியிலுள்ள எலும்புகளும், மேல்பகுதியிலுள்ள தொடையிலும் உள்ள மென் திசுக்களும் சேதமடைவதால் மூட்டுஎலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதி பாதிக்கப்பட்டவருக்கு மிகுந்த வலியைஏற்படுத்தும். இது போன்ற நோயினால் தான் வாஜ்பாய் அவதிப்பட்டு வந்தார்.
பிரதமரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், மூட்டுக்கு எந்த விதமானபாதிப்பும் ஏற்படாத வகையில் மிதமான பிசியோதெரபி பயிற்சிகள் முதலில்அளிக்கப்படும் என்றனர்.
ஏற்கனவே, அறுவைச் சிகிச்சை நடந்த ஐந்தாவது நாள் முதல் வாஜ்பாய் நடக்கத்தொடங்குவார் என பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தராஜன்ரனவத் கூறியுள்ளார். முதலில் வாஜபாய் வாக்கர் கருவியின் உதவியுடன் நடப்பார்.பின் குச்சிகளின் உதவியுடன் நடப்பார். மூன்று அல்லது நான்கு மாதங்களில் அவர்சாதாரணமாக நடக்க ஆரம்பிப்பார் என்றும் ரனவத் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications