இலங்கை தேர்தல்: வெற்றி முகத்தில் சந்திரிகா கூட்டணி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் வரத் துவங்கியுள்ளன. இதுவரைதெரிந்த ஐந்து தொகுதிகளின் முடிவுகளில் ஆளும் மக்கள் கூட்டணிக்கு நான்கு இடங்களில் வெற்றிகிடைத்துள்ளது.
17 ஆண்டுகால தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண இந்தத் தேர்தல் முடிவுகள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்குமிகவும் முக்கியமானதாக உள்ளது. பல்வேறு முறைகேடுகள் புகார்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குத்தேர்தல் முடிவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணும் பணி துவங்கியது.
இதுவரை ஐந்து தொகுதிகளின் முடிவுகள் தெரியவந்துள்ளன. இவற்றில் அதிபர் சந்திரிகாவின் தலைமையிலானமக்கள் கூட்டணிக்கு நான்கு தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. பலபிட்டியா, ஹலிஇல்லா, ரத்தோரா,முல்லைத்தீவு தொகுதிகளில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வடக்க இலங்கையில் உள்ள முல்லைத்தீவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொகுதி என்பதுகுறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவுக்கான தேர்தல் வாக்குச் சாவடிகள் வவுனியாவில் அமைக்கப்படிடருந்தன.மொத்தம் உள்ள 53,000 வாக்காளர்களில் 652 பேர் மட்டுமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்மக்கள் கூட்டணி வேட்பாளருக்கு 439 வாக்குகள் கிடைத்தன.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மத்திய பசரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கூட்டணிவேட்பாளர்கள் தபால் ஓட்டுக்களை அதிகம் பெற்றனர்.
இலங்கை தேர்தல் விதிப்படி, நேரடியாக யாரும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒரு கட்சிவெற்றி பெறும் தொகுதிகளை வைத்து சதவீதப்படி அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள்ஒதுக்கப்படுவார்கள். இலங்கை நாடாளுமன்றத்திற்கு மொத்தம் 225 எம்.பி. இடங்கள் உள்ளன.
இதற்கிடையே, மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களில் வன்முறை மற்றும்முறைகேடுகள் காரணமாக வாக்கும் எண்ணும் பணி தாமதமாகத் துவங்கும் என இலங்கைத் தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
வாக்கும் எண்ணும் பணி தாமதமின்றி நடப்பதற்காக அனைத்து வாக்கு எண்ணும் இடங்களிலும் சிறப்புஅதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சந்திரிகா கூறியுள்ளார். வாக்கும் எண்ணும் இடங்களில்யார் பிரச்சினை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications