ஜெயலலிதா சொத்து: ஏ.ஆர்.ரகுமானிடம் நாளை விசாரணை
சென்னை:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானிடம் வெள்ளிக்கிழமை குறுக்கு விசாரணைநடைபெறுகிறது.
டான்சி வழக்கு முடிவடைந்ததை அடுத்து முன்னாள் தல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைதீவிரமடைந்துள்ளது. இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.5 கோடிக்குசொத்துக்கள் சேர்த்ததாக சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 258 பேர்விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் 124 அரசு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எதிர் தரப்பினருக்கு நீதிபதி அனுமதிவழங்கியுள்ளார்.
அதன்படி ஜெயலலிதாவின் சொத்துக்களை மதிப்பீடு செய்த முன்னாள் பொதுப்பணித் துறை பொறியாளர் பாஸ்கரனிடமும்வியாழக்கிழமை எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.
அரசு தரப்பில் ஏற்கனவே சாட்சியம் அளத்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மாண்டலீன் சீனிவாசன், முன்னாள்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட 7 பேரிடமும் வெள்ளிக்கிழமை குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.
இதற்கான சம்மன் ரகுமான் உள்ளிட்ட 7 பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் ரகுமான் இசைக் கச்சேரி நடத்தினார். இதையடுத்து இவரும்சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications