சுரங்கத்தில் காஸ் கசிவு: 25 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் காஸ் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக,சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோங்கு மாவட்டம் லான்சோக் பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் புதன்கிழமை காஸ் கசிவு ஏற்பட்டது. அப்போது 120 க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு உயர்போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புப் படையினர்,நிலக்கரிச் சுரங்க அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

க்யுசாவ் பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் காஸ் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் 125 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தவருடத்தில், முதல் நான்கு மாதத்தில் மட்டும் 9 நிலக்கரிச் சுரங்கங்களில் காஸ் கசிவினால் விபத்து ஏற்பட்டது. இதில் 665 க்கும் மேற்பட்டோர்இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+