வீரப்பனின் அரசியல் தொடர்புகள்
சேலம்:
வீரப்பனுக்கும், கர்நாடக அரசியல் பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, தமிழ்த் தீவிரவாதி மாறனின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரப்பனின் ஆதரவாளரான, தமிழ் தீவிரவாதி மாறனுடைய ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகம் குறித்து "காலைக் கதிர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளசெய்தி:
வீரப்பன் தமிழன் என்ற தலைப்பின் கீழ் வெளியாகியுள்ள விவரங்கள் வருமாறு:
தமிழர் பண்பாட்டைக் காக்கும் வீரப்பன் வேட்டைக்காரன் என்று கர்நாடக அரசு சித்திரித்தது. அதுமட்டுமன்றிவீரப்பனை அணுகிய கர்நாடக அரசியல் பெரும்புள்ளிகள் சந்தனக் கட்டைகளை வெட்டித் தரும்படிக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தனக்கு மட்டுமின்றி வீரப்பன் கிராமத்தில் வாழும் மக்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கும் என்ற காரணத்தால்வீரப்பனும் இதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதே சமயம் பாளே கவுடா தலைமையில் வேறொரு கும்பலும் இதேதொழிலை செய்து வந்தது.
சந்தனமரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி விடுவதோடு இவர்கள் வேலை முடிந்தது. லாரிகளில்சந்தனக்கட்டைகளைக் கடத்திச் சென்று அவற்றை மாநிலங்களில் விற்பனை செய்வது, கடத்தல் வணிகர்கள்தான்.இதனால் வீரப்பன் கும்பலுக்கு கிராக்கி ஏற்பட்டது. பணமும் குவிந்தது. கையில் கிடைத்த பணத்தை மலைவாழ்மக்களுக்கு வாரி வழங்கினார் வீரப்பன்.
வனத்துறையினரும், காவல்துறையினரும் வீரப்பனிடம் மாமூல் வாங்கினார்கள். வீரப்பனின் வளர்ச்சிஎதிர்க்கோஷ்டியான பாளே கவுடா கும்பலுக்கு பொறாமையைக் கொடுத்தது. அரசியல் பெரும்புள்ளிகள் பலரும்வீரப்பனை நாடினார்கள்.
1977 ல் நடந்த தேர்தலில் வீரப்பன் ஆதரவளித்த காங்கிரஸ் வேட்பாளர் ராஜூ கவுடா வெற்றி பெற்றார். அவர்அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாகப்பாவைத் தோற்கடித்தார். அவருக்காக வீரப்பன் கிராமம், கிராமமாகச்சென்று ஓட்டுக் கேட்டார். இதற்கு நன்றிக் கடனாக வீரப்பன் கோரிக்கைக்கு இணங்க, கிராம மக்களுக்குத் தொகுப்புவீடுகள் கட்டிக் கொடுத்தார் ராஜூ கவுடா. இந்தத் தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவை முன்னாள் முதல்வர்குண்டுராவ் திறந்து வைத்தார்.
தேர்தலில் தோல்வியடைந்த நாகப்பா கோஷ்டியினர் வீரப்பன் மேல் ஆத்திரமடைந்தனர். வீரப்பனைத் தீர்த்துக்கட்டத் தீர்மானித்தனர். இதைத் தெரிந்து கொண்ட வீரப்பன் இனிமேலும் அங்கிருந்தால் தனக்கு ஆபத்து வரும்என்று கருதி, அப்பகுதியிலிருந்து குண்டல்பேட் என்ற பகுதிக்குச் சென்று தன் தொழிலைத் தொடங்கினார்.
ஆனால் 1986 ம் ஆண்டு காஜனூர் தொகுதியில், நாகப்பா மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வீரப்பனைஏதாவது ஒரு குற்றத்தில் சிக்க வைக்கத் திட்டமிட்டார்.
1986 ம் ஆண்டு குண்டல்பேட் காட்டில் ஒரு வனத்துறை ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலையை வீரப்பன்தான் செய்திருக்க வேண்டும் என்று ஜோடனை செய்து போலீஸ் வீரப்பனைத் தேடியது.ஆனால் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை.
தலைமறைவாகியிருந்த வீரப்பன், பெங்களூருக்குச் சென்று, ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது போலீஸார்அவரைக் கைது செய்தனர். எந்த வித விசாரணையும் இன்றி அவரை வீட்டுக் காவலில் வைத்தனர்.
அந்த சமயத்தில் பெங்களூரில் சார்க் மாநாடு நடந்து கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் போலீஸ் கெடுபிடிஇருந்தது.
மேலும் வீரப்பனை, வீட்டுக்காவலில் வைத்திருப்பது நல்லதல்ல என்று கருதி போலீஸார் அவரை சாம்ராஜ்நகர்நகரத்திலுள்ள பூதி படுகா என்ற இடத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு வீரப்பனைக் கொன்றுவிடு என்று நாகப்பா, வனத்துறைப் போலீஸாரிடம் தெரிவித்தார். இந்த சதியைமோப்பம் பிடித்த வீரப்பன் அங்கிருந்து தப்பித்து விட்டார்.
அன்று தலைமறைவாகியவர்தான் வீரப்பன். அன்றிலிருந்து இன்று வரை அவரை யாராலும் பிடிக்க முடியவில்லை.கடந்த 14 வருடங்களாக கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப் படை போலீஸாரும், ராணுவ எல்லைப் படையும்வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேடுதல் வேட்டை நடத்தியபடியே இருக்கிறது.
நரபலி வாங்குபவன், தந்தங்களை சூறையிட்டவன், சந்தன மரத் திருடன் என்று கொச்சைப்படுத்துவதும், அவர்கோரிக்கைகளை நயவஞ்சகமானது, விபரீதமானது, முட்டாள்தனமானது என்பதை விளக்குவதே இந்தக்கையேட்டின் நோக்கம்.
நான்கு கோடிக் கன்னடர்களின் கன்னடநாடு இது என்று கூறுவோரின் பேச்சுக்குப் பணிந்து, ஆமாம். இது கன்னடநாடு. நமக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று தொடை நடுங்கிப் பேட்டி அளிக்கின்றவர்கள் மனநோயாளிகள்.அவர்கள் யாரும் கர்நாடக, தமிழர் சிக்கலில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தப் புத்தகத்தில்கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications