லஞ்சம் வாங்கிய வழக்கில் நரசிம்மராவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள்பிரதமர் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் ஆகியோருக்கு 3ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்கள் மீதுவழக்குப் பதிவு செய்யவும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1993-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மீதுலோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில்நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.

இது முடிந்ததும், புதிய புகார் எழுந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்குநரசிம்மராவ் பணம் கொடுத்தார் என்று ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா கட்சி குற்றம்சாட்டியது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியது. தற்போதுஇந்த வழக்கில் நரசிம்மராவுக்கும், அவரது அமைச்சரவையில் இருந்த பூட்டா சிங்கும் 3ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம்அபராதம் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 13(1) கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைமற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை ஏக காலத்தில்அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால், 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைஇருவருக்கும் கிடைத்தது.

ராவ் மற்றும் பூட்டாசிங் இருவரும் மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு வசதியாகநவம்பர் 8-ம் தேதி வரை தலா ரூ. 2 லட்சம் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்தும்நீதிபதி பரிஹோக் உத்தரவிட்டார்.

அபராதத் தொகையை இருவரும் கட்டாவிட்டால் மேலும் ஆறு மாத சிறைத் தண்டனைஅனுபவிக்க வேண்டும்.

வியாழக்கிழமை பிற்பகல் 1.55 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் கூட்டம் அலைமோதியது.

3 பேர் மீது வழக்கு:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களான சூரஜ் மண்டல், சிமோன் மராண்டி, சிபுசோரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யவும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம்உத்தரவிட்டது.

நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கட்சியின் இன்னொருஎம்.பியான சைலேந்திர மஹதோ மீது வழக்குப் போட நீதிமன்றம் உத்தரவிடவில்லை.இவர் வழக்கு விசாரணையின்போது அப்ரூவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது நரசிம்மராவிற்கு ஆதரவாக ஓட்டுப் போடபணம் வாங்கினோம் என்று மஹதோ கூறியதால், இந்த வழக்கில் பெரும் திருப்புமுனைஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று எம்.பிக்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நீதிபதிபரிஹோக் உத்தரவிட்டார்.

இந்திய அரசியல் வரலாற்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் முன்னாள்பிரதமர் நரசிம்மராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கின் விவரம் குறித்துத் தெரிய தொடர்ந்து படியுங்கள்.

பிப்ரவரி 1, 1996: நரசிம்மராவ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குஆதரவாக வாக்களிக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு பணம்கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.யில், ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா எம்.பி. ரவீந்தர் குமார்புகார் கொடுத்தார்.

மார்ச் 25, 1996: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்கள் சூரஜ் மண்டல், சிபு சோரன்,சிமோன் மராண்டி, சைலேந்திர மஹதோ மீது சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது.

மே 24, 1996: நரசிம்மராவ் பெயரையும் சேர்த்து புதிய தகவல் அறிக்கை பதிவுசெய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.

செப்டம்பர் 4, 1996: நரசிம்மராவிடம் சி.பி.ஐ. விசாரணை.

செப்டம்பர் 5, 1996: சோரன், மராண்டி, மண்டல் ஆகியோர் டெல்லியில் கைதுசெய்யப்பட்டனர்.

செப்டம்பர் 6, 1996: ஜாம்ஷெட்பூரில் வைத்து மஹதோ கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 30, 1996: நரசிம்மராவ், பூட்டா சிங், சதீஷ் சர்மா, சோரன், மண்டல்,மராண்டி, மஹதோ மீது சி.பி.ஐ முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

டிசம்பர் 9, 1996: ராஜேஷ்வர் ராவ், ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவெகெளடாவின் மகன்), ராமலிங்க ரெட்டி, வீரப்ப மொய்லி, ஆதிகேசவலு, திம்மேகெளடா ஆகியோர் மீது சி.பி.ஐ. இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

மே 17, 1997: மஹதோ அப்ரூவர் ஆக சம்மதம் தெரிவித்தார்.

செப்டம்பர் 15, 1997: ராவ் மற்றும் 19 பேர் மீது பேர் மீது குற்றம் பதிவுசெய்யப்பட்டது.

ஜூன் 4, 1999: மராண்டி, சோரன், மண்டல், முன்னாள் எம்.பிக்கள் ராம் லக்கன் சிங்யாதவ், அபய் பிரதாப் சிங், அநதி சரண் தாஸ், ராம் சரண், ரோஷன் லால், ஹாஜிகுலாம் முகம்மது ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 29, 2000: நரசிம்மராவ், பூட்டாசிங் குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம்தீர்ப்பளித்தது. பிற 9 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனைக் காலம்ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 11, 200: இரு தரப்பு வழக்கறிஞர்களின் விவாதங்களை கேட்ட பின்னர்தீர்ப்பு 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்டோபர் 12, 2000: ராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+