நெடுமாறனுடன் போனில் பேசினார் சோனியா .. சுவாமி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வீரப்பனிடம் தூதுவராக சென்றுள்ள தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன் செய்து காட்டுக்குப்போகுமாறு கூறியதாக தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளின்ஆதரவாளரான நெடுமாறன் வீட்டுக்கு எட்டு நாட்களுக்கு முன் சோனியா போன்செய்துள்ளார். அவரிடம், ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனிடம் தூதராகசெல்ல கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எனக்குக்கிடைத்த தகவல் இதைக் கூறுகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராகஇருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக சோனியாவே, நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் என்று கூறியுள்ளார் சுவாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications