தயாராகிறது பிரான்சின் முதல் இந்துக் கோவில்
பாரீஸ்:
பிரான்சின் முதல் இந்துக் கோவிலை அமைக்க கிரிகானியில் உள்ள இந்தியர்கள்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாரீசுக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிரிகானி என்ற சிறுநகரில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வாழ்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
இங்கு 200 இந்தியர்கள் இணைந்து சனாதன தர்ம கழகம் என்ற பெயரில் அமைப்புஒன்றை அமைத்து, நிதி திரட்டி இந்து கோயில் ஒன்றை அமைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, கிரிகானில் 600 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில்450 பேர் பாண்டிச்சேரியிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் குடிபெயர்ந்து வந்தவர்கள்ஆவர்.
பிரான்சில் வாழ்ந்து வரும் ராஜாராம் மோகன் என்பவர் கிரிகின் வாழ் தமிழர்களின்தலைவராக திகழ்கிறார். மோகன் கூறுகையில், எனது முக்கிய குறிக்கோள் இந்தியமக்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதுதான்.பாண்டிச்சேரியிலிருந்து வந்த பெரும்பாலோனோர் ஏழைகள். அவர்கள் மிகவும்கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இங்கு சாதாரண பணிகள்செய்து வருகிறார்கள். அவர்கள் உதவி என்று எதையும் பிரான்ஸ் அரசிடமிருந்து பெறமுடிவதில்லை.
தாங்கள் இங்கு தனிமையில் விடப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதக்கூடாது.உதவிக்காக வேறு யாரிடமும் உதவி கேட்டு கையேந்தி நிற்கக்கூடாது. அவர்கள்அனைவரையும் ஒன்று படுத்துவதற்கு இந்து கோயில் அமைப்பதும் ஒரு வழியாகும்.இந்தக் கோயில் வழிபாட்டுத்தலமாக மட்டும் விளங்காது. இங்கு பல கலைநிகழ்சிகளும் நடத்தப்படும்.
சனாதன தர்ம கழகம் கடந்த வாரம் இந்து முறைப்படி பூஜைகள் செய்துதொடங்கப்பட்டது. பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும்அப்போது நடத்தப்பட்டன.
பலரும் இங்கு கோவில் கட்டுவது மிக கடினமான காரியம் என எண்ணுகிறார்கள்.ஏனென்றால் கோவில் கட்டுவது குறித்து இதுவரை பிரான்சு அதிகாரிகளிடமிருந்துஅனுமதி பெறவில்லை. அவர்களிடமிருந்து கோவில் கட்ட அனுமதி பெறுவதுகடினமானது என்பது தெரியும். இருந்தாலும் கோவில் கட்டுவதற்காக போராடுவோம்.போராடி அனுமதி பெறுவோம் எனக் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications