அரசியல் விமர்சனம்
இது, அற்புதம்!
சமீபத்தில் தமிழகத்தில் ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது. அற்புதம் என்றே சொல்லி விடலாம்.
வீரப்பனுக்கான அரசு தூதர் நக்கீரன் கோபால், நான்காவது முறையாக காடு சென்று திரும்பிய பிறகு, கர்நாடக முதல்வர் எதிர்க் கட்சிகளைகலந்தாலோசித்தார். கோபாலுடன் இன்னொருவரும் தூதுவராகச் செல்ல வேண்டும் - என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை, தமிழக முதல்வர் முன் அவர்வைத்தார்.
தமிழக முதல்வர், கோபாலிடம் இதுபற்றி கேட்டார்.
கோபால், நாட்டிலிருந்து கொண்டே, காட்டிலிருக்கும் வீரப்பனிடம் கேட்டார்.
வீரப்பர், புதிய தூதருக்கு அனுமதி மறுத்தார்.
கோபால் இதை தமிழக முதல்வரிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரிடம் செய்தி தெரிவிக்க, இன்னொரு கூடுதல் தூதர் எண்ணம் கைவிடப்பட்டது.
வீரப்பனுடன் தொடர்பு கொண்டு, அவன் மறுப்பைப் பெற அரை நாள் கூட தேவைப்படவில்லை ; எல்லாம் மாம்பலத்திலிருந்து, மயிலாப்பூருக்கு செய்திஅனுப்பி, பதில் பெறுகிற வேகத்தில் நடந்து முடிந்து விட்டது. இது ஒரு சாதனைதானே?
சாதாரணமாக வீரப்பனுடன், அரசு தூதர் தொடர்பு கொள்வது என்றால் - வீரப்பன் செய்தி அனுப்ப வேண்டும் ; மழை, வெய்யில் போன்ற சீதோஷ்ணசமாச்சாரங்களின் நிலைகளுக்கு ஏற்றபடி காத்திருந்து செய்தி பெறப்பட வேண்டும் ; சிக்னல் வரும் என்று முதல்வர் காத்திருக்க வேண்டும் ; இப்படி சிலதினங்கள் கழிந்த பிறகுதான் தொடர்பே ஏற்படும்.
ஆனால் இப்போது புதிய தூதர் மறுப்பு - என்கிற செய்தியை காட்டிலிருந்து, நாட்டுக்குக் கொண்டுவர, இந்த சங்கடமெல்லாம் தேவைப்படவே இல்லை!கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் செய்தி பெறப்பட்டது! சாதனை தான்! தகவல் தொடர்பு, ரொம்பவும்தான் முன்னேறி விட்டது!
காட்டிலிருந்து அடுத்த முறை, அரசு தூதர் நிறைய கூடை கூடையாக பூ கொண்டு வந்து இரு மாநில முதல்வர்களிடம் கொடுத்தால் நல்லது. மக்களின் காதுகள்காத்துக் கிடக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications