அமைதி, அமைதி ... இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு கிளிண்டன் கோரிக்கை
வாஷிங்டன்:
இஸ்ரேல்,பாலஸ்தீன நாடுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதிப்பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கிளிண்டன்கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையில் இதுவரை100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமைமூன்று இஸ்ரேல் ராணுவ வீரர்களை, பாலஸ்தீன தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.இதையடுத்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளும் வன்முறையை கைவிட்டு அமைதிப் பேச்சை துவக்கவேண்டும் என விரும்புகிறேன். நடந்துவரும் வன்முறையை வன்மையாககண்டிக்கிறேன் என கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் வன்முறையை நிறுத்தவேண்டும். இரண்டாவதாக இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கவேண்டும். அப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தமுயற்சி மேற்கொள்ள முடியும் என்றார்.
இந் நிலையில் அமெரிக்க அதிபர் கிளின்டண் வியாழக்கிழமை முழுவதும் இஸ்ரேலியமற்றும் பாலஸ்தீனிய அதிபர்களை தொடர்பு கொண்டு பேசி வந்தார் என செய்திகள்கூறுகின்றன.
இந்த விஷயம் குறித்து வெளியுறவு அமைச்சர் மெடலின் அல்பிரைட், பாதுகாப்புஆலோசகர் சாண்டி பெர்ஜர் ஆகியோருடன் கிளிண்டன் தீவிர ஆலோசனை செய்தார்.
தொலைபேசி மூலம் இரு முறை பாலஸ்தீன அதிபர் அராபத்துடனும், இஸ்ரேலியஅதிபர் பாரக்குடனும், எகிப்து அதிபர் முபாரக்குடனும், சிரிய மன்னர்அப்துல்லாவுடனும், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளைருடனும், ஐக்கிய நாடுகள்சபையின் தலைவர் கோபி அன்னானுடனும் பேசினார்.
அனைத்து தலைவர்களும் அமெரிக்க அதிபரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.நிலைமை மேலும் மோசமடையும் முன் வன்முறை ஒடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கரோவ்லி தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications