நெடுமாறன் சென்றதில் தவறில்லை ... கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழ. நெடுமாறனின் தமிழ தேசிய இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.எனவே நெடுமாறன், ராஜ்குமாரை மீட்க காட்டுக்குள் சென்றுள்ளதில் தவறில்லை என்றுதமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தமிழர்தேசிய இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நெடுமாறன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக, அவர்களுக்கும், வீரப்பனுக்கும்இடையே பாலமாக நெடுமாறன் செயல்படுவார் என்று கருதக் கூடாது. அதேபோல,தமிழ்த் தீவிரவாதிகளுக்கும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்தொடர்பு இருப்பதாகவும் நினைக்க முடியாது.

நெடுமாறனை அனுப்பியது தவறு என்று எதிர்க்கட்சிகள் கூறுவதில் நியாயமில்லை.தமிழகத்தில் பல கட்சிகள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றன. நெடுமாறனுக்குஎதிராக குரல் கொடுக்கும் இந்தக் கட்சிகள், ஏன் அந்தக் கட்சிகள் குறித்துக்கவலைப்படவில்லை.? அவர்களது கூட்டணியில் நெடுமாறன் இல்லை என்பதற்காகஅவரை குறி வைத்துக் குறை கூறுகின்றன இந்தக் கட்சிகள்.

நெடுமாறனையும், சுகுமாறனையும், கல்யாணியையும் காட்டுக்குப் போகுமாறுநாங்கள் கூறவில்லை. அவர்களை காட்டுக்கு வருமாறு வீரப்பன்தான் கேட்டிருந்தார்.வீரப்பனின் விருப்பப்படி அவர்கள் காட்டுக்குச் சென்றுள்ளனர்.

நெடுமாறனை அனுப்புமாறு கோரி வீரப்பன் அனுப்பிய செய்தியை வெளியிடுவதுசரியாக இருக்காது.

கோபாலை ஓரம் கட்டி விட்டு நெடுமாறன் குழுவினர் காட்டுக்குச் செல்லவில்லை.அரசுத் தூதராக கோபால் சென்றுள்ளார். அவருக்கு உதவியாக நெடுமாறன் குழுவினர்சென்றுள்ளனர். கோபால்தான் நெடுமாறன் குழுவினரை காட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்தக் குழுவினர் ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் என்று நம்புகிறோம்.

நெடுமாறன் விடுதலைப் புலி அனுதாபி என்று சங்கரய்யா கூறுகிறார். அவர் போனவாரம் என்ன சொன்னார், போன மாதம் என்ன சொன்னார், போன வருடம் என்னசொன்னார் என்பதை நான் அறிவேன்.

ராஜ்குமார் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்அதிகமாக தலையிடுவதாக நான்நினைக்கவில்லை. நீதிமன்றங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களது கருத்துக்கள்,விசாரணைகளை தலையீடாகக் கருதவில்லை என்றார்.

பேட்டியின்போது, துவக்கத்தில் நெடுமாறனை அரசுத் தூதர் இல்லை என்று கூறியகருணாநிதி, இறுதியில், கோபாலுடன் சென்றுள்ளவர்கள் அனைவருமே அரசுத்தூதர்கள்தான் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+