கொள்ளிடத்தில் வெள்ளம் .. 5 கிராமங்கள் அழிந்தன

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருவானைக்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவானைக்கோவில் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களில்வெள்ளம் புகுந்தது. பால் பண்னை, வாழைத்தோட்டங்கள் நாசமானது.

மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட அதிகமானதால் அதில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால்காவிரிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

நாளுக்கு நாள் மழை அதிகமாக பெய்து வருவதால் காவிரி நிரம்பி வழிகின்றது. இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டது.இதனால் கொள்ளிடம் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டதால் திருவாணைக்கோவில் பக்கமுள்ள பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, உத்தமர்சீலி,திருப்பாற்றுரை, பனையபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொன்னுரங்கபுரத்தில் செங்கல் தயாரிக்கும் சேம்பரில் வெள்ளம்புகுந்தது. மேலும் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் குடிசைகளிலும் வெள்ளம் புகுந்து குடிசைகளை மூழ்கடித்தது.

திருவளர் சோலையில் உள்ள வயல்களில் அறுவடை முடிவடையும் தருவாயில் இருந்த பயிர்கள், வாழைகள், பூச்செடிகள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால்விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திம்மராய சமுத்திரம் பால்பண்ணையில் வெள்ளம் புகுந்து அங்கிருந்த பால் கேன்கள், வைக்கோல்குடிசைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

திருப்பாற்றுத்துறை கிராமம் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அங்குள்ள கிராம மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்துவெளியேறி மேடான பகுதிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

மேலும் ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதம் விளைவிக்காமல் பனையபுரம் கிராம தலைவர் பக்கிரிசாமி தலைமையில் பால்ராஜ் பாலகிருஷ்ணன்,சுப்பிரமணியன் விசுவநாதன் உள்பட கிராம மக்கள் மணல் மூட்டைகளை போட்டு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாணைக்கோவில் பக்கமுள்ள திருவளர்சோலை, பனையபுரம் கிராமங்களின் சாலைகளில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடுவதால்பஸ்கள் கல்லணைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவானைக்கோவில் வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்திருவளர்சோலை பனையபுரம், உத்தமர்சீலி செல்லும் கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர்.

மேலும் திருப்பாற்றுறை கிராம மக்கள் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தங்கள் உடைமைகளை மூட்டைகளாக தூக்கிக்கொண்டு குழந்தைகளுடன்எடுத்துச் சென்று கொண்டிருப்பது பரிதாபமான காட்சியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+