ஒரு பக்கம் உற்சாகம் .. மறு பக்கம் அவமானம்
ஹைதராபாத்:
ஹைதராபாத் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வித்தியாசமான காட்சிகளைக்கண்டனர் ஆந்திர மக்கள்.
ஒரு பக்கம் உற்சாகம், மறுபக்கம் சோகம். ஒலிம்பிக்கில் சாதனை படைத்து வெண்கலப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய கர்னம் மல்லேஸ்வரியும், லஞ்சம் கொடுத்ததற்காக 3ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின்மகன்கள் ரங்காராவ், ராஜேஷ்வர் ராவ் ஆகியோரும் ஒரே விமானத்தில் வந்தனர்.
மல்லேஸ்வரி முகத்தில் மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க இறங்கினார்.நரசிம்மராவின் மகன்களோ இறுகிய முகத்துடன், யாரையும் பார்ப்பதைத் தவிர்த்துவேகமாக இறங்கி வெளியேறினர்.
மல்லேஸ்வரியை வரவேற்க கூடியிருந்த கூட்டம், நரசிம்மராவின் மகன்களை சட்டைசெய்யவே இல்லை. அனைவரின் கவனமும் மல்லேஸ்வரி மீதே இருந்தது.
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல, நரசிம்மராவ் மகன்களும், மல்லேஸ்வரியும்காணப்பட்டனர். சொந்த மாநிலத்திலேயே நரசிம்மராவின் செல்வாக்கு செல்லாக்காசாகி விட்டதையே இந்த புறக்கணிப்பு உணர்த்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஒருகாலத்தில் தெலுங்கு பிட்டா (தெலுங்கு மைந்தன்) என்று பெருமையோடுஅழைக்கப்பட்ட நரசிம்மராவ் இப்போது அலட்சியமாக பார்க்கப்படுகிறார்.நரசிம்மராவுக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது, நீதிமன்றத்தில் அவருடன் இருமகன்களும் இருந்தனர்.
சி.பி.ஐ. வழக்கில் கொடுத்த தண்டனை போதாது என்று ஆந்திர மாநில அரசும் ராவுக்குவேறு விதமான தண்டனை கொடுத்துள்ளது. ஆந்திர மாநில எட்டாம் வகுப்புப்பாடத்தில் இருந்த ராவ் குறித்து பாடப் பகுதிகளை நீக்க மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து பிரதமர் பதவிக்கு வந்த முதல் நபர்என்ற பெருமைக்காக ராவ் குறித்த பாடம் எட்டாவது வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.
ராவுக்குத் தண்டனை வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பாடப் புத்தகத்திலிருந்துராவ் பாடத்தை நீக்க மாநில அரசு உத்தரவிட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications