ஜெ. சொத்துக்கள் பறிமுதல் .. தயாராகிறது சி.பி.சி.ஐ.டி.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா, சசிகலா வாங்கிய டான்சி சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்என்று தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, இந்த சொத்துக்களை பறிமுதல்செய்யும் முயற்சிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாகி உள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவன நிலத்தை வழிகாட்டிமதிப்பீட்டிற்கு குறைவாக வாங்கியதன் மூலம் அரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் இழப்புஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீதுசி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு டான்சி நிலத்தை மீட்டு மீண்டும்அரசுடைமையாக்க வேண்டும் என்றும் நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி டான்சி நிலத்தை அரசுடைமையாக்கும் முயற்சியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலுடன் அரசுக்குஅவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தின் அடிப்படையில் டான்சி நிலம்பறிமுதல் செய்யப்படும்.

ஜெயலலிதா, சசிகலா வாங்கிய 4 ஏக்கர் டான்சி நிலம் அரசுடைமையாக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+