ரவுடியின் பிணத்தை தோண்டியெடுத்து பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை:

உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்து புதைக்கப்பட்டரவுடியின் பிணத்தைத் தோண்டி போலீஸார் பரிசோதனைசெய்தனர்.

உடுமலைப் பேட்டை அருகே உள்ள சிவகிரிப் பேட்டையைச்சேர்ந்தவர் கிருஷ்ணன் (35). இவர் பல வழக்குகளில் சிறைசென்று வந்த ரவுடி ஆவார்.

இவரது நண்பர்கள் "ஆசிட் குமார், கே.கணேசன், ஜி. கணேசன்ஆகியோருக்கு கிருஷ்ணணுடன் கொடுக்கல் வாங்கல் தகராறுஇருந்து வந்தது. இந்நிலையில் கிருஷ்ணனை அழைத்துச் சென்றுமிரட்டியுள்ளனர்.

இதில் ஏற்பட்ட சண்டையில், கிருஷ்ணனை அடித்துக் கொலைசெய்துள்ளனர். பின்னர் கிருஷ்ணனின் உடலை பழனி அருகேஉள்ள தென்னந்தோப்பில் உள்ள ஒரு மட்டையில் சுருட்டிஎடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதில்மிஞ்சிய உடலை ஒரு ஓடையின் அருகில் புதைத்தனர். பின்னர்தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், ஜி.கணேசன் என்பவர் பழநி போலீசில்சரணடைந்து கொலை செய்ததைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனிடம்நீண்ட விசாரணை நடத்தினர்.

பின்னர், புதைக்கப்பட்ட பிணத்தின் பகுதியைத் தோண்டி எடுத்துபரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி புதைக்கப்பட்ட இடத்தை கணேசன் அடையாளம்காட்டினர். தாசில்தார் முன்னிலையில் தோண்டப்பட்ட இந்தஇடத்தில் கருகிய நிலையில் இருந்த ஒன்றரை கிலோ எலும்புமட்டும் கிடைத்தது. இதை பரிசோதனைக்குப் போலீசார் அனுப்பிவைத்தனர். பரிசோதனையின் முடிவில், கிடைத்ததுகிருஷ்ணனின் எலும்புதானா என்று தெரிய வரும்.

கிருஷ்ணன் கொலை தொடர்பாக மற்ற இரண்டு பேரையும்போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+