2 மாணவிகள் கிணற்றில் மூழ்கி சாவு
சேலம்:
சேலம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.
சேலம் அருகே பூளவாடி என்ற ஊரைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகள் நித்யா(10). இதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சங்கீதா (10). இருவரும்தோழிகள். இந்த இரண்டு சிறுமிகளும் பூளவாடியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில்4ம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் அக்டோபர் 12ம் தேதி குளிப்பதற்காக கிணறு ஒன்றிற்குச் சென்றனர். அங்குகுளித்துக் கொண்டிருக்கும்போது நித்யா கால் இடறி கவிழ்ந்தார். இதனைக் கண்டசங்கீதா அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், இருவரும் தண்ணீருக்குள்மூழ்கினர். அருகில் காப்பாற்ற யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.
கிணற்றிற்குள் குளிக்கச் சென்ற மாணவிகளைக் காணாததால் அவர்களது பெற்றோர்கள்சந்தேகமடைந்து கிணற்றிற்குள் தேடினர். இதில், இரண்டு மாணவிகளும் இறந்துபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications