கேட்டவுடன் காஸ் .. கூறுகிறார் மத்திய அமைச்சர்
சென்னை:
காத்திருப்போர் பட்டியல் என்ற பேச்சே இல்லை. இனிமேல் சமையல் காஸ்கேட்டவுடன் கிடைக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர்பொன்னுசாமி தெரிவித்தார்.
சென்னையில் பொன்னுசாமி அளித்த பேட்டி:
கரும்பில் இருந்து எத்தனால் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. இதை பெட்ரோலில்20 சதவீதம் கலந்து பயன்படுத்தினால் பெட்ரோலை சிக்கனப்படுத்த முடியும்.
இதன்மூலம் பெட்ரோல் பயன்பாடு ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் ரூ.15 ஆயிரம் கோடிஅளவுக்கு குறையும். இத்தகைய பயனுள்ள எத்தனால் தயாரிக்கிற ஒரு தொழிற்சாலைவிரைவில் தமிழகத்தில் துவங்கப்பட உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்றஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் உள்ள ஆலை டிசம்பரில்உற்பத்தியை தொடங்கும்.
வந்தவாசி, திண்டிவனம், விருத்தாச்சலம், வேலூர், தர்மபுரி ஆகிய 5 இடங்களில்சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன.
நாகப்பட்டினத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும்நாப்தா தயாரிப்பு ஆலை நிறுவப்பட உள்ளது. புவனகிரியில் ஏற்கனவே இருக்கிறஎரிவாயு ஆலையை சீர்ப்படுத்தி அங்கு 60 ஆயிரம் கன மீட்டர் எரிவாயு உற்பத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிக அளவு பாதிக்காதவகையில் மாநில அரசுகள் வரிகளை குறைப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. சிலமுதல்வர்கள் வரியை குறைக்கிறோம் என்றும், சிலர் முடியாது என்றும்தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதி "பார்க்கிறேன் என்று பதில்கூறியுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டில் இந்தியா ழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் புதிய சமையல் காஸ்இணைப்புகள் தரப்பட்டுள்ளன. 1999-ல் டிசம்பர் வரை பதிவு செய்துஇருந்தவர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.
இனி காத்திருப்போர் பட்டியலே இல்லை என்கிற அளவுக்கு உடனுக்குடன் புதிய காஸ்இணைப்புகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பொன்னுசாமி.












Click it and Unblock the Notifications