யாழ். சண்டையில் 9 விடுதலைப் புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் 9 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், 9 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 5-ம் தேதிபுலனருவா மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டசம்பவத்தையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
5-ம் தேதி நடந்த தாக்குதலில் நெப்போலியன் என்ற புலியின் தலைமையில் புலனருவாதாக்குதல் நடந்தது.
இந்தச் சூழ்நிலையில், வவுனியா மாவட்டத்திலுள்ள சந்திரிக்குளம், வெளிஓயா,நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் நடந்த ராணுவத் தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள்இறந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications