கார் உற்பத்தியை அதிகரிக்கிறது மாருதி உத்யோக் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:

கார் உற்பத்தியை அதிகரிக்க மாருதி உத்யோக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலேயே கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாருதி உத்யோக்நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலம் கர்கோவனில் கார் உற்பத்தித் தொழிற்சாலைஉள்ளது.

அங்கு தற்போது ஆண்டுக்கு 4.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.விரைவில் ஆண்டுக்கு 6 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி உத்யோக் நிறுவனத்தில் இந்திய அரசும், சுசூகி நிறுவனம் தலா 50 சதவீத பங்குமுதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது ஜப்பானில் சுற்றுப்பயணம்செய்து வருகிறார். அவரைச் சந்தித்த சூகி நிறுவனத் தலைவர், மாரு உத்யோக்நிறுவனத்துக்கு ஹரியானா மாநில அரசு அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஹரியானா மாநில தொழில் கொள்கை மற்றும் மாநிலத்தில் நேரடி வெளிநாட்டுமுதலீட்டை அதிகரிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அடுத்து அம்மாநிலத்தில் ஜப்பானில் உள்ள பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம்கொண்டுள்ளதாக சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் நிதிப் பிரச்சினையால் சிக்கித்தவிக்கும்போது மாருதி உத்யோக் நிறுவனம் மற்றும் சிறப்பாகச் செயல்பட அந்நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலம் அளிக்கும் ஆதரவுதான் காரணம் என்று சுசூகிநிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+