1 கோடி கையெழுத்து .. கவர்னரிடம் கொடுக்கிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு கோடி கையெழுத்துக்களை 16ம் தேதி கவர்னர் பாத்திமா பீவியிடம்ஒப்படைக்கிறார் மூப்பனார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கையெழுத்துஇயக்கம் நடத்தியது த.மா.கா. இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்துபெறப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல்வாயு விலையை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்று இந்த ஒரு கோடி பேரும் கையெழுத்திட்டு வலியுறுத்தியுள்ளனர்.
த.மா.கா .தலைவர்கள் பல பகுதிகளில் பெற்ற இந்த கையெழுத்துக்களை 16ம் தேதிகவர்னர் பாத்திமா பீவியை சந்தித்து சமர்ப்பிக்கிறார் த.மா.கா .தலைவர் மூப்பனார்.
இதே நாளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும்அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.












Click it and Unblock the Notifications