பூடானிலிருந்து அருணசால பிரதேசத்திற்கு இடம் பெயரும் தீவிரவாதிகள்
குவஹாத்தி:
உல்ஃபா தீவிரவாதிகள் தங்கள் தலைமையகத்தை பூடானிலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றி வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்தீவிரவாதிகளின் தலைமையகம் பூடானில் உள்ளது.
உல்ஃபா தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அஸ்ஸாம் மாநில போலீஸாரும் மற்ற கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸாரும்தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், பூடானுக்கும் இந்திய போலீஸார் சென்று உல்ஃபா தீவிரவாதிகளைக் கைது செய்தனர்.
இதையடுத்து தங்களது தலைமையகத்தை அருணாசலப் பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் மாற்றிவருவதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் போலீஸார் அஸ்ஸாமிய மொழியில் உல்ஃபா தீவிரவாதிகளின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டனர். அப்போதுதான் அவர்கள் தங்களது தலைமையகத்தை பூடானிலிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றிவருவதாகத் தெரியவந்தது.
அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து அவர்கள் தலைமையத்தை படிப்படியாக அருணாசலப் பிரதேசத்துக்கு மாற்றி வருகின்றனர் என்று அஸ்ஸாம் மாநில மத்தியமேற்கு பிராந்திய போலீஸ் டிஐஜி திலீப் போரா தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications