போனஸ் போதாது: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று 19-ம் தேதி முதல் போராட்டம் நடத்தமின்வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு இவ்வாண்டு 20 சதவீதபோனஸ் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடுவீராச்சாமி சென்னையில் செவ்வாய்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
போனஸ் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தினோம். அதில்எடுத்த முடிவுப்படி மின்வாரியத்தில் பணி புரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு8.33 சதவீத போனசும், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் ஆக மொத்தம் 20சதவீதம் போனஸ் வழங்குவது என்று முடிவெடிக்கப்பட்டது.
மின்வாரிய விநியோகப் பிரிவில் பணி புரியும் 10 ஆயிரம் ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.300 கருணைத் தொகையாகவழங்கப்பட்டது. அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றுதொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அது முடியாது. எனவே ரூ.400 ஆகஉயர்த்தி வழங்கப்படும்.
அதேபோல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தலா ரூ.925 வழங்குவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பு மூலம் மின் வாரியத்துக்கு ரூ.55 கோடிகூடுதலாக செலவாகும். மாநிலம் முழுவதும் வருகிற 20ம் தேதி போனஸ்வழங்கப்பட்டு விடும் என்றார் அமைச்சர்.
போராட்ட அறிவிப்பு:
தமிழக அரசு அறிவித்துள்ள 20 சதவீத போனசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 19-ம் தேதிபோராட்டம் நடத்தப் போவதாக மின் வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்புஅறிவித்துள்ளது.
20 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. கடந்த ஆண்டை போலவே இந்தஆண்டும் ஊழியர்களை ஏமாற்ற அரசு நினைக்கிறது என்று அந்த சங்கம் குறைகூறியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications