மதிமுக பிரமுகர் கொலை : "கட்சிக்குத் தீராத களங்கம்
நாமக்கல்:
ம.தி.மு.க. பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், கட்சி வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டதுஎன கட்சியின் பொருளாளரும் மத்திய அமைச்சருமான கண்ணப்பன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் கடந்த 16ம் தேதி நடந்த ம.தி.மு.க.,உட்கட்சித் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டிமோதலில் தென்னரசு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ம.தி.மு.க.,பொருளாளரும், மத்திய மரபுசாரா எரிசக்தித் துறைஅமைச்சருமான கண்ணப்பன் நாமக்கல் வந்து சேர்ந்தார். கொலையுண்ட தென்னரசுவின் குடும்பத்தைச் சந்தித்துஆறுதல் கூறிய பிறகு, அமைச்சர் கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல்லில் நடந்த சம்பவம் ம.தி.மு.க., வரலாற்றில் மாறாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. கட்சி தொடங்கி 6ஆண்டுகளில் நடக்காத இத்தகைய சம்பவம் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தி விட்டது.
நான் டில்லியில் இருக்கும்போது இந்த சம்பவம் குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. இது பற்றி நியூயார்க்சென்றுள்ள கட்சியின் பொதுச் செயலர் வைகோவிற்குத் தகவல் தெரிவித்துள்ளேன். சம்பவம் குறித்து வைகோஆழ்ந்த துயரமும், தென்னரசுவின் குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நான் உடனடியாகப் புறப்பட்டு நாமக்கல் வந்து சேர்ந்தேன். இங்கு தென்னரசின் குடும்பத்தைபார்த்து ஆறுதல் கூறினேன். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. 9 மாதக் குழந்தையுடன் இருக்கும்இவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ம.தி.மு.க., செய்யும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க ம.தி.மு.க ஒத்துழைக்கும்.கட்சியினர் ஈடுபட்டிருந்தால் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications