தங்கம் வென்ற தங்கங்கள்
தேவை முழு ஒத்துழைப்பு
இலங்கையின் இன்றைய நிலையில் தேர்தல் நடத்தப்பட்டதே, ஒரு சாதனைதான். அப்படி நடந்த தேர்தல், பெரும்பாலும் பாரபட்சமின்றி, நியாயமானமுறையிலேயே நடத்தப்பட்டிருப்பதாக, மேற்கத்திய பார்வையாளர்களின் நடுநிலை அமைப்பு கூறியிருப்பது, இலங்கை அரசு திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயம்.
தேர்தல் முடிவுகள், பெரிய மாற்றம் எதையும் தோற்றுவித்து விடவில்லை. சந்திரிகாவின் மக்கள் கூட்டணி கட்சி முன்பு இருந்ததை விட, இரண்டு இடங்கள்கூடுதலாகப் பெற்றிருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், சந்திரிகாவின் கட்சியும், ஓரளவு ஓட்டிழப்பைச் சந்தித்திருக்கின்றன. இதன் பலன் ஜனதா விமுக்திபெரமுணா என்ற சிங்கள அடிப்படைவாத கட்சிக்குப் போயிருக்கிறது.
அவர்கள் 10 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.தமிழர் கட்சிகளில் மிதவாத தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்ஓரளவு வெற்றி கண்டிருக்கின்றன.
சமஷ்டி அமைப்பை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கிற சந்திரிகாவின் முயற்சி - இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால் பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பலம் அவர் கட்சிக்கு இல்லை; ஆகையால் அரசியல் சட்டமாற்றங்களை அவரால் செய்ய முடியாது. இது ஒரு தடை.
தேர்தலுக்கு முன்பாக சந்திரிகா அடுத்து வருகிற பாராளுமன்றத்தையே நான் அரசியல் சாசன சபையாக மாற்றி விடுவேன்; அப்போது மூன்றில் இரண்டுபங்கு மெஜாரிட்டி தேவைப்படாது; சாதாரண மெஜாரிட்டி பலத்தை வைத்துக் கொண்டே அரசியல் சட்ட மாற்றங்களைச் செய்து விடலாம் என்றுகூறியிருந்தார்.
ஆனால், கேட்பதற்கு சுவையாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது; பாரளுமன்றத்தை, அரசியல் சாசன சபையாக மாற்றுகிறஅதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
ஆகையால், தமிழர்களுக்கு பல உரிமைகளைத் தருகிற வகையில், பல மாற்றங்களைச் செய்வதற்கு சந்திரிகா முனைகிற போது, எதிர்க் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவை அவர் பெற்றாக வேண்டும். இலங்கையில் அமைதி திரும்ப இந்த மாதிரி ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
தமிழர்களுக்கு உரிமைகளைத் தருகிற முயற்சியை ஜனாதிபதி சந்திரிகா, தேர்தலுக்கு முன்பாகவே ஆரம்பித்தார்; அதை மக்கள் நிராகரிக்காததால்தான்அவருடைய கட்சி தேர்தலில் முன்னணியில் நின்றது; ஆகையால் சிங்கள மக்களே கூட, இந்த முயற்சிகளை ஏற்கிறார்கள் என்றுதான் ஆகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கும் திசையில் செல்வதற்காக - இரு பெரிய கட்சிகளும், அரசியல் ஆதாயப்போக்கை மறந்து, இவ்விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களுக்கு விவேகம் இருக்குமா என்பது சந்தேகமே.
இதற்கிடையில், கட்சி உடைப்பு, கட்சி மாற்றம் போன்றவற்றை உருவாக்கி, மெஜாரிட்டி பலத்தை மேலும் பெருக்கிக் கொள்ள மக்கள் கூட்டணிகட்சி முனைந்தால், அதன்பிறகு ஒத்துழைப்பு என்பது ரொம்பவும் சிரமமான காரியமாகி விடும்.
சமஷ்டி அமைப்பை உருவாக்குவதில் இலங்கையின் இரு முக்கிய கட்சிகளை ஒத்துழைக்குமாறு நிர்பந்திக்க மேலை நாடுகளும், இந்தியாவும் முன் வந்தால்நல்லது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications