For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம்: கன்னட நடிகர்கள் உறுதி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் காட்டிலிருந்து திரும்பும் வரை தாடியை எடுக்கமாட்டோம் எனநடிகர்களும்,ராஜ்குமார் மகன்களும் கூறியிருக்கின்றனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த ஜுன் மாதம்30-ம் தேதி கடத்திச் சென்றான். அவர் கடத்திச் செல்லப்பட்டு 82 நாட்கள் ஆகிவிட்டன.

அவர் கடத்தப்பட்டது முதலே கன்னடத் திரையுலகம் சோகமாக இருந்து வருகிறது.கன்னட நடிகர்கள் அம்பரீஷ். விஷ்ணுவர்த்தன், சசிகுமார், ரவிச்சந்திரன் உட்பட பலநடிகர்கள் தாடியுடன் காட்சியளிக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ராஜ்குமார்வீட்டிற்குச் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அது குறித்தபுகைப்படமும் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அதில் தன் மகன்கள் தாடியுடன்இருப்பது கண்டு மனம் வருந்தி, வீரப்பனால் விடுவிக்கப்பட்ட கோவிந்தராஜிடம், என்மகன்களை தாடியை எடுத்துவிடச் சொல்லுங்கள் எனக் கூறி அனுப்பினார்.

பெங்களூர் வந்த கோவிந்தராஜ் அந்தத் தகவலை ராஜ்குமார் குடும்பத்தினரிடம்சொன்னார். பர்வதம்மாவும் ராஜ்குமார் ஆசையை பூர்த்தி செய்வதாக வானொலியில்பேசும் போது கூறினார்.

ஆனால் ராஜ்குமார் மகன்களோ, அவர் வீட்டில் வேலை செய்யும் ஆண்பணியாளர்களோ, ராஜ்குமார் திரும்பி வரும் வரை தாடியை எடுக்க மாட்டோம் எனக்கூறிவிட்டனர்.

நாங்கள் தாடி வளர்ப்பது ஒரு வேண்டுதல் போலாகும். அண்ணா (ராஜ்குமார்) வரும்வரை தாடியை எடுக்க மாட்டோம் என நடிகர்அம்பரீஷ் கூறினார்.

மந்திரி கார்கே பேட்டி:

கர்நாடக போலீஸ் மந்திரி கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேடடியில்அவர் கூறியதாவது:

முதல் மந்திரி கிருஷ்ணா,தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசி மூலம்பேசினார். மீண்டும் அரசு தூதர்கள் வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்குச்செல்வார்கள்.

ஆனால் அவர்கள் எப்போது காட்டுக்குச் செல்வார்கள் எனத் தெரியாது எனறார்.

இந்த முறை தூதுக்குழுவில் கர்நாடக மாநில சார்பில் அரசு தூதர் யாராவதுசெல்கிறார்களா என கேட்டபோது, எனக்குத் தெரியாது என பதிலளித்தார் அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X