கோவாவில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி - பதவி விலக முதல்வர் மறுப்பு
பனாஜி:
கோவாவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் அம் மாநில பாரதீய ஜனதா கட்சிமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தலைமையிலான 11 மாத கூட்டணி ஆட்சி தற்போதுஆட்டம் கண்டுள்ளது.
கோவா மக்கள் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து கூட்டணிஆட்சியை நடத்தி வந்தன. இந் நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3பாஜக அமைச்சர்கள் திடீரென்று சனிக்கிழமை தங்களது பதவியை ராஜினாமாசெய்தனர்.
அதே நேரத்தில் கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியில் மேலும் பிளவுஏற்பட்டது. இதனால், கோவா அரசியயலில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டதை அடுத்து 40 பேர் கொண்ட கோவாசட்டப்பேரவையில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. தற்போது அக் கட்சிக்கு 18 பேர்உள்ளனர்.
இதையடுத்து கோவாவில் பிற கட்சிகள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க பாரதீயஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவையிலிருந்து விலகிய பாஜகவினர், தாங்கள் பிற கட்சிகளுடன் சேர்ந்துஆட்சி அமைக்க அனுமதிக்கும்படி கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
கட்சித் தலைமையும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படிஅவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இதையடுத்து அடுத்தகட்ட முயற்சிகளில்அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் ரவி ராயக்உள்பட 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர்ந்தனர்.
தற்போது கோவா சட்டப்பேரவை பாஜக தலைவராக மனோகர் பர்ரிகார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைந்தால் அவர் முதல்வராகப் பதவியேற்பார்என்று கூறப்படுகிறது.
ஆட்சி அமைப்பது குறித்து மற்ற கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்திவருகிறார். எந்த நேரத்தில் ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் மொகம்மதுபஸலிடமிருந்து அழைப்பு வரும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார்.
அதற்கு முன்னதாக பிரான்சிஸ்கோ சர்டினா அரசுக்கு அளித்து வரும் ஆதரவைவிலக்கிக் கொள்வதாக பாஜக அறிவிக்கும்.
இந் நிலையில், முதல்வர் பதிவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications