For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டரின் அலட்சியம் .. சாலையில் பிரசவித்த பெண்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரிஅரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த ஏழை கர்ப்பிணிபெண்ணிற்கு டாக்டர் சிகிச்சை அளிக்காமல் விரட்டி அடித்ததால் அப்பெண்ணுக்குபோக்குவரத்து மிகுந்த சாலையில் பிரசவமானது.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கொதித்தெழுந்து மருத்துவமனையைமுற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. விரைந்து வந்த மாநிலசுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜ், சிகிச்சை அளிக்கத் தவறிய மருத்துவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பாண்டிச்சேரியை அடுத்த தென்னல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (25). நிறைமாத கர்ப்பிணியானஇவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு திங்கள் கிழமை காலைகணவர் அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த மருத்துவர் அப்பெண்ணை பரிசோதித்து விட்டு இப்போது குழந்தைபிறக்காது; வீட்டுக்கு போங்கள் என்று கூறி விட்டார். அப்பெண் வலியை பற்றிஎடுத்துச் சொல்லியும் அந்த டாக்டர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நீ டாக்டரா;நான் டாக்டரா என்று அப்பெண்ணிடம் டயலாக் பேசியுள்ளார்.

வேறு வழியின்றி வெளியே வந்த வசந்திக்கு பனிக்குடம் உடைந்து விட்டது. உடனேமருத்துவமனைக்குள் சென்று மீண்டும் டாக்டரிடம் விஷயத்தை சொன்னார். அவரோபிரசவம் பார்க்க லஞ்சம் வாங்கும் பேர் வழியாம். எனவே பிடிவாதமாக வெளியேற்றிவிட்டார்.

காவலாளியை அழைத்து உள்ளே விடாதே என்றும் உத்தரவு போட்டு விட்டார்.அதனால் அப்பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்காவலாளிகள். அதில் அந்த கர்ப்பிணிப் பெண் நிலைகுலைந்து நடுரோட்டில்விழுந்தார். அந்த இடத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்த கொடுமையான சம்பவம் நடக்கும் போது காலை 9.30 மணி. பரபரப்பானசூழ்நிலை. வாகனங்கள் வரிசையாக அந்த சாலையை அடைத்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தன. ஆனாலும், மனித நேயம் அடியோடு மறைந்துவிடவில்லைஎன்பதற்கு எடுத்துக் காட்டாக அவ்வழியே சென்ற பெண்கள் ஓடோடி வந்தனர்

அப்பெண்ணுக்கு உதவி செய்தனர். சினிமாவில் வருவது போல் சேலையால் மறைப்புஏற்படுத்தி அப்பெண்ணின் மானத்தையும், குழந்தையையும் காப்பாற்றினர்.

இந்த தகவல் தெரிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் பயந்து போய் விட்டனர்.உடனே ஸ்ரெட்ச்சரை தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அப்பெண்ணையும், குழந்தையும்ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், திரண்டிருந்த பொதுமக்கள்மருத்துவர்களின் அலட்சியத்தை கண்டித்து ஆவேசமடைந்தனர். அரசுமருத்துவமனையை சுற்றி முற்றுகையிட்டனர்.

சுகாதார அமைச்சர் வல்சராஜ் ஓடோடி வந்து விசாரணை நடத்தினார். அந்தஅலட்சியக்கார டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X