டெல்லி-சென்னை இடையே அதிவேக சரக்குப் போக்குவரத்து வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விரைவில் அதி நவீனசரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள மத்திய சரக்குப் போக்குவரத்துக் கழகம் முடிவுசெய்துள்ளது.

தரைவழி சரக்குப் போக்குவரத்தில் இந்த மாற்றம் முக்கிய இடம் பெறும் என்று சரக்குப்போக்குவரத்துக் கழக இயக்குநர் ரமேஷ் சந்திரா துபே கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய சரக்குப் போக்குவரத்துவிரைவில் துவங்கும். தொழில்நுட்ப அனுமதி கிடைத்தவுடன் இந்தப் போக்குவரத்துதுவங்கும். சென்னை-டெல்லி பிரிவில் இனிமேல் பயண நேரம் 48 மணி நேரமாகஇருக்கும். டெல்லி-பெங்களூர் பிரிவில் பயண நேரம் 60 மணி நேரமாக இருக்கும்.

சேலத்தில் புதிய சரக்குக் கையாளும் முனைம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும். கோயம்பத்தூரிலுள்ள சரக்குப்பெட்டக முனையம் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணி அடுத்த ஆண்டுஜூலை மாதம் நிறைவடையும்.

இதுதவிர, பாண்டிச்சேரி, அரக்கோணம், மங்களூர் ஆகிய நகரங்களிலும் சரக்குப்பெட்டக முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் பிராந்தியத்தில், சரக்குப் போக்குவரத்து மிகவும்திருப்திகரமாக இருந்து வருகிறது என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+