புலிகள் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் காயம்
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் மார்ட்டர் தாக்குதலில் 8 ராணுவ வீர்ரகள்காயமடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில், எழுத்துமட்டுவல் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில்பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுவிடுதலைப் புலிகள் திடீரென மார்ட்டர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய சொட்டு மருந்து கொடுக்கும்நிகழ்ச்சி நடப்பதால், அன்று மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று யுனிசெப்அமைப்பு புலிகளுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இதை புலிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இருப்பினும் போர் நிறுத்தத்தை மீறி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அரசுபுகார் கூறியுள்ளது.
இதற்கிடையே, திரிகோணமலையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக நான்குபேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications