காங். தலைவர் தேர்தல்: சோனியாவுக்காக தலைவர்கள் வேட்பு மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தற்போதைய தலைவர் சோனியாகாந்தி சார்பில் பல மனுக்கள் சனிக்கிழமை தாக்கல்செய்யப்பட்டன.
முதல் மனுவை சோனியா சார்பில், உ.பி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரகாஷ்ஜெய்ஸ்வால் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அனில் சாஸ்திரி, ஷியாம்லால்யாதவ், சிவராஜ் பால்மிகி ஆகியோரும் சோனியாவுக்காக மனுத் தாக்கல் செய்தனர்.இவர்கள் அனைவரும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஒரிசா, அருணாச்சல் பிரதேஷ், மிஸோரம், நாகாலாந்துஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் சோனியாவுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துத் தலைவர்களும்சோனியா காந்தி இல்லத்திற்குச் சென்று அவரிடம் கையெழுத்து பெற்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications