தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பதில் தாக்குதலில்ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

தலைநகர் ஜம்முவிலிருந்து 230 கிலோமீட்டர் வடக்கே சியால்கோட்டில் மத்திய ரிசர்வ்போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) முகாம் உள்ளது. இம் முகாம் மீதுதீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் சனிக்கிழமை காலைதாக்குதல் நடத்தினர்.

இத் தாக்குதலில் முகாம் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். இத் தாக்குதலைஅடுத்து இரு தீவிரவாதிகள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருதீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி தப்பியோடிவிட்டார்.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்என்று தெரியவில்லை. மேலும், இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும்பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே, ராஜோரி மாவட்டத்தில் புத்தால் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஒரு ராணுவ வீரர் இறந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+