அடிப்படை உரிமைகளை வழங்க தலிபானுக்கு அமெரிக்கா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பாரம்பரிய மக்களுக்கும் மனிதஉரிமையும், அரசியல் அதிகாரமும் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தலிபான் அரசைஅமெரிக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.ஆப்கானிஸ்தான் தொடர்பான இத் தீர்மானத்துக்கு ஆதரவாக 381 வாக்குகள்விழுந்தன. எதிர்த்து ஒரு வாக்கும் விழவில்லை. 52 பேர் வாக்களிக்கவில்லை.

இத் தீர்மானத்துக்கு சட்டத் திருத்தம் ஏதும் இல்லாமல் நாடாளுமன்றம் ஏகமனதாகஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மனித உரிமைகளும், அரசியல்அதிகாரமும் வழங்கப்படவேண்டும். நாட்டில் நடைபெற்று வரும் அனைத்துபயங்கரவாத நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அதேபோல் சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்தி, மனித உரிமை மீறல் போன்றநடவடிக்கைகளும் தடுத்து நிறுத்த ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசு முயற்சிமேற்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் மூலம் அமெரிக்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மக்கள் சுதந்திரமாகச் செயல்படவும், நாட்டில் அமைதியும்,நிலைத்தன்மையும் ஏற்பட அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைமீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பதை அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டிலிருந்து தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது.அன்று முதல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய பகுதியாக அந் நாடுவிளங்கி வருகிறது.

உலகிலேயே அதிகம் ஓபியம் என்ற போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவதுஆப்கானிஸ்தானில்தான். மனித உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. குறிப்பாகபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் மிகவும் அதிகம்என்று அமெரிக்க காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீண்டும் ஏற்படுவதற்குஆதரவு அளிப்பதாக அமெரிக்க காங்கிரஸ் தனது தீர்மானத்தின் மூலம்தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+