காங். தலைவர் பதவி: சோனியா Vs
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய தலைவர் சோனியாகாந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கட்சித் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்திவேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத பட்சத்தில் அவரே மீண்டும்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருந்தது. ஆனால், அவரை எதிர்த்துகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜிதேந்திர பிரசாதா ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அவர் வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டிஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜிதேந்திர பிரசாதா தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் அலுவலம் அருகே ஜிதேந்திர பிரசாதாஆதரவாளர்களுக்கும், சோனியா காந்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தலையிட்டு மோதலைத்தடுத்து நிறுத்த போராடினர். அதற்குள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானஅஜீத் ஜோதி, அலுவலகத்துக்கு வெளியே வந்து மோதலில் ஈடுபடவேண்டாம் என்றுகேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இரு தலைவர்களின் தொண்டர்களும் மோதலில் ஈடுபடுவதைத்தவிர்த்தனர்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த ஜிதேந்திர பிரசாதாநிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் வேண்டும் என்பதற்காகப்போராடியவர்கள் மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சீதாராம் கேசரி மற்றும் ராஜேஷ்பைலட்.
அந்த இரு தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில்தான் தலைவர் பதவிக்குப்போட்டியிட நான் வேட்பு மனுத் தாக்கல் செய்தேன். மேலும், காங்கிரஸ் கட்சித்தொண்டர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டும் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications