பயணி சாவு: சென்னையில் தரையிறங்கிய சவூதி விமானம்
சென்னை:
பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து சவூதி அரேபியா நாட்டின்போயிங் விமானம், சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைஅவசரமாகத் தரையிறங்கியது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த போயிங் 747 விமானம் ஜெட்டாவிலிருந்து மலேசியத்தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்து.
விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த பயணி ஒருவருக்குத் திடீரென்றுகடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனே விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவர்முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இருப்பினும், அப் பயணி இறந்துவிட்டார். இதையடுத்து அவசரமாக விமானத்தைத்தரையிறக்க சென்னை சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானிதொடர்பு கொண்டு அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்ததும் விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. விமானநிலையத்திலிருந்த மருத்துவர்களும் பரிசோதித்துப் பார்த்து அப் பயணிஇறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இறந்த பயணியின் சடலத்துடன் சிறிது நேரத்துக்குப் பிறகு விமானம் கோலாலம்பூர்புறப்பட்டுச் சென்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications