மருத்துவமனையில் முரசொலி மாறன்
சென்னை:
மத்திய வர்த்தகத் துறை அமைச்சரும், திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமானமுரசொலி மாறன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது.
வீட்டிலேயே ஓரளவு சிகிச்சை மேற்கொண்டாலும், மாலையில் மூச்சுத் திணறலும்,ஒற்றைத் தலைவலியும் கடுமையானது. இதையடுத்து அவர் உடனே அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர்இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமைச்சர் மாறனை, முதல்வர் கருணாநிதி,அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர்.
மாறனின் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் முதல்வர் கருணாநிதி கேட்டறிந்து,தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications