ராஜ்குமார் விடுதலை...?! வன்முறையைத் தடுக்க உறவுப் பாலம்
அரவங்காடு (ஈரோடு):
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் வன்முறை ஏற்படக்கூடும் என்றுகருதப்படுவதை அடுத்து மக்களிடையே ஒற்றுமையையும், சகோதரபாசத்தையும் வலியுறுத்தும் வகையில் உறவுப் பாலம் என்ற அமைதி இயக்கம்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த பசுமை இயக்கம் என்ற தனியார் அமைப்பு ஒன்று இந்த இயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக,வன்முறைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் மைசூர் கல்லூரி முதல்வர், முன்னாள் தமிழக டிஜிபி லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலர் பேசினர். அனைவரும் இரு மாநில அரசுகளின்நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தடை ஆகியவற்றால் ராஜ்குமார் விவகாரம் சிக்கலாக்கப்பட்டுவிட்டதாகக் கூறினர்.
இதுபோன்ற வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்துவது குறித்து கர்நாடக சாகித்ய அகாதெமி தலைவருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.விரைவில் பெங்களூர் மற்றும் மைசூரில் இதுபோன்ற அமைதிப் பிரசாரம் நடத்தப்படும் என்றார் பசுமை இயக்க நிறுவனர் தலைவர் ஜீவானந்தம்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வன்முறைக்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications