மாறன் உடல்நலம்: கருணாநிதியிடம் விசாரித்தார் வாஜ்பாய்
சென்னை:
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன் உடல் நலம் குறித்து முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில்பிரதமர் வாஜ்பாய் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அமைச்சரும், திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன், ஒற்றைத் தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டுள்ளார்.
திமுக தலைமைகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்வர் கருணாநிதியை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
முன்னதாக முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்பட பலர் மருத்துவமனைக்குச் சென்று முரசொலி மாறனைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications