அதிருப்தியாளர்கள் கவனிக்கப்படுவார்கள்.. இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் முறையிட்டுள்ளேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியாவை எதிர்த்து உ.பி. மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர பிரசாத் போட்டியிடுகிறார். நேரு குடும்பத்தை எதிர்த்துகாங்கிரசில் களமிறங்கியுள்ள முதல் மனிதர் இவர் தான். இதனால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், பிரசாத் உண்மையான காங்கிரஸ்காரரே அல்ல. அவர்பாஜகவின் தூண்டுதல் காரணமாக சோனியாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

எங்களை பொறுத்தவரையில் சோனியாவின் வெற்றிக்காக உழைப்போம். ஆனால், இங்கேயும் ஒரு சில பேர் ஜிதேந்திர பிரசாத்தை ஆதரிக்கின்றனர்.அவர்கள் காங்கிரசை விற்கத் துடிக்கின்றனர். இவர்கள் யார் என்று சோனியாவுக்கு அடையாளம் காட்டுவேன்.

தமிழகத்தில் உள்கட்சித் தேர்தல் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதுபற்றி சோனியாவிடம் முறையிட்டுள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள். அதற்குகாரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை என்றார் இளங்கோவன்.

இதற்கிடையே இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறுகையில், அது காங்கிரஸ் உள்கட்சி விவகாரம். அதுபற்றி நான் சொல்வதற்குஒன்றுமில்லை என்றார்.

டெல்லியில் சோனியாவை சந்தித்துப் பேசி விட்டுத் திரும்பியுள்ள மூப்பனாரிடம் நிருபர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர், தேர்தல் என்பது காங்கிரசின்உள்கட்சி விவகாரம். அதில் நான் எப்படி தலையிட்டு கருத்து சொல்வது? என்று மறுத்து விட்டார்.

சரி அதை விடுங்கள். தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா? என்று கேட்டபோது, "அது கருணாநிதியின் ஆசை. அவர் வந்தால் மூன்றாவது அணிஅமைக்கத் தயார் என்று கிண்டலடித்தார் மூப்பனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+