5 ஆண்டுகளில் ரூ.460 கோடி நஷ்டம்: மூடப்படுகிறது பெட்ரோ ஃபில்ஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொதுத் துறை நிறுவனமான பெட்ரோஃபில்ஸ் கூட்டுறவு நிறுவனம், நஷ்டம்காரணமாக மூடப்படுகிறது.
வடோதராவில் உள்ள இந் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.460 கோடிஅளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து இந் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து, டெல்லியில் பிரதமர் வாஜ்பாய்தலைமையில் திங்கள்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.
அக் கூட்டத்தில், நஷ்டத்தில் இயங்கும் பெட்ரோஃபில்ஸ் கூட்டுறவு நிறுவனத்தைமூடிவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அந் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் நிதிவழங்கப்பட்டு விலக்கப்படுவார்கள் என்றும், இதற்கு மத்திய அரசுக்கு ரூ. 95 கோடிசெலவாகும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications