மாறன் சுகவீனம்: நலம் விசாரித்தார் கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து, கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மத்திய தொழில்துறை அமைச்சருமான முரசொலி மாறன், ஒற்றைத் தலைவலி மற்றும் மூச்சுத் திணறல்காரணமாக கடந்த தீபாவளியன்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் உடல்நிலை தேறி வருகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications