தீ விபத்தில் சேதமடைந்த தபால் நிலையம் புதுப்பிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த வாரம் தீ விபத்தில் சேதமடைந்த தலைமைத் தபால் நிலையத்தை ஒன்றரைக் கோடியில் புதுப்பிக்க மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை பாரிமுனையில் மிகப் பழமையான கட்டிடத்தில் தலைமைத் தபால் நிலையம் இயங்கி வந்தது. இங்கு மின்சாரக் கசிவு காரணமாக கடந்த வாரம் தீவிபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து மத்திய தபால் துறை அமைச்சகத்தின் தலைமைப் பொறியாளர்தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தையில் இக்கட்டிடத்தைப் புதுப்பிக்க ஒரு கோடிக்கு மேல் செலவாகும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குழு ஒன்றரைக்கோடியில் தபால் நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications