அமைச்சர் - திமுக எம்.எல்.ஏ. அடிதடி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ஆளும் திமுக எம்.எல்.ஏ.வும், மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். கைகலப்பிலும் இறங்கினர். இதில் இருவரது சட்டையும் கிழிந்தது.

கோவை மாநகர் மாவட்டச் செயலராக சி.டி தண்டபாணி எம்.எல்.ஏ. இருந்து வருகிறார். இதே போன்று புறநகர்மாவட்ட செயலராக முன்பு மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இருந்து வந்தார்.அப்போதிருந்தே இருவருக்கும் இடையே சிறு சிறு மோதல் நடந்து வந்தது.

தற்போது புறநகர் பகுதிச் செயலராக அமைச்சர் பழனிச்சாமியின் மனைவி விஜயலட்சுமி பழனிச்சாமி இருந்துவருகிறார். இந்நிலையில் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பளையத்தில் நடந்த நிகழ்ச்சியில்,செவ்வாய்க்கிழமை மாநில அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொள்ள வந்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து புறநகர் பொறுப்பளர்களுக்கும், மாநகர் பொறுப்பாளர்களுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இது எம்.எல்.ஏ. தண்டபாணிக்கும், மாநில அமைச்சர் பழனிச்சாமிக்கும் இடையே பெரும் மோதலாக மாறியது.எம்.எல்.ஏ. வும் அமைச்சரும் சர்க்யூட் ஹவுசில் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தனி அறையில்நடந்த இந்த சம்பவத்தின் போது அமைச்சர் பழனிச்சாமியை எம்.எல்.ஏ., சி.டி தண்டபாணி தாக்கியதாகக்கூறப்படுகிறது.

"வாக்குவாதம் முடிந்த பின் அமைச்சர் பழனிச்சாமி ஆவேசத்துடன் வெளியே வந்தார். சி.டி.தண்டபாணி சட்டைகிழிந்த நிலையில்காணப்பட்டார். இதைப் பார்த்த இரு தரப்பு தொண்டர்களும் ஆத்திரமடைந்தனர். அடிதடியில்இறங்கினர்.

மாநகரச் செயலரை மீறி, புறநகர்ச் செயலர் செயல்படுவதாகப் புகார் கூறப்பட்டது. இதனால் சர்க்யூட் ஹவுசில்பதட்டம் ஏற்பட்டது. உள்ளே சண்டை போட்ட பின் வெளியே வந்த தொண்டர்கள் பல இடங்களில் திடீர்சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு ஒரு தரப்புத் தொண்டர்களைக் கைது செய்தனர். பின்னர்சாலை மறியல் கைவிடப்பட்டது.

புதன்கிழமை ஜெயலலிதா பேச்சைக் கண்டித்து தி.மு.க. வினர் நடத்தவிருக்கும் போராட்டத்தால் இந்தப் பிரச்னைஎழுந்தது எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+