ஈராக்கிடம் அணுகுண்டு .. தப்பி வந்த விஞ்ஞானி தகவல்
வாஷிங்டன்:
ஈராக் அணு குண்டு தயாரித்து வைத்துள்ளதாகவும், ஆனால் அதை வீரியமிக்கதாகமாற்றும் யுரேனியம் மற்றும் பிற பொருட்கள் அதனிடம் இல்லையென்றும்ஈராக்கிலிருந்து தப்பி வந்துள்ள அணு விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஈராக்கின் அணு ஆயுதத் திட்டங்களில் முக்கியமானவராக இருந்தவர் கிதிர் ஹம்ஸா.இவர் தற்போது ஈராக்கிலிருந்து தப்பி வாஷிங்டன் வந்துள்ளார். ஈராக்கின் அணுஆயுதத் திட்டங்கள் குறித்த பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
கிதிர் ஹம்ஸா கூறுகையில், ஈராக்கிடம் சில கிலோடன்கள் எடை கொண்ட அணுகுண்டு தயாரிக்கும் திறன் உள்ளது. ஒரு ஏவுகணை மூலம் ஏவ முடியாத அளவுக்கு அதுஇருப்பினும் கூட, விமானம் மூலம் எடுத்துச் சென்று குறிப்பிட்ட இலக்கில் வீசக் கூடியதிறனை ஈராக் பெற்றுள்ளது.
1991ம் ஆண்டு முடிந்த வளைகுடாப் போருக்குப் பிறகு அணு குண்டு தயாரிக்கும்முயற்சிகளை ஈராக் முடுக்கி விட்டது. ஆனால் தறபோது ஈராக்கிடம் யுரேனியம்இல்லை. ஆனால் முக்கியமான சில பொருட்களைத் தவிர முழுமையான அணுகுண்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஈராக்கிடம் உள்ளது.
ஈராக் அணு குண்டு தயாரிக்க முடிவு செய்தால் சில மாதங்களில் அதை செய்து விடமுடியும் என்றார் ஹம்ஸா.
ஹம்ஸா, "சதாம் - ஏ பாம் மேக்கர் என்ற புத்தகத்தை எழுதியவர். சமீபத்தில் இந்தப்புத்தகம் வெளியானது.
இதற்கிடையே, அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஈராக்கிடம்அணு குண்டு தயாரிப்பதறகான அடிப்படைக் கட்டமைப்பு வசதி எதுவும் இல்லை.அவர்களிடம் அணுகுண்டுக்குத் தேவையான எந்தப் பொருளும் இருப்பதாக நாங்கள்நம்பவில்லை என்றனர்.
ஹம்ஸா தொடர்ந்து கூறுகையில், செரிவூட்டப்பட்ட யுரேனியம்தான் அணுகுண்டுதயாரிப்பில் மிகவும் முக்கியமானது. அதைத் தயாரிக்கும் பணியில், விஞ்ஞானிகளைசதாம் உசேன் ஈடுபடுத்தியுள்ளார். அதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்பிடிக்கும்.
சொந்தமாக தயாரிக்க முடியாவிட்டால் வெளிநாடுகளிலிருந்து அதைப் பெறும்முடிவில் சதாம் இருக்கிறார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட அணு குண்டைத் தயாரித்து விட்டால் அதற்கு மேலும் அதைரகசியமாக வைத்திருக்க மாட்டார் சதாம். நிச்சயம் வெளிப்படையாக தன்னை ஒருஅணு சக்தியாக காட்டிக் கொள்வார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications