சதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்
லாஸ்ஏஞ்சல்ஸ்:
ஈராக் அதிபர் சதாம் உசேனை மையமாக வைத்து டாக்குமென்டரிப் படம் எடுத்தவருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜோல் சோலர். 32 வயதாகும் இவர் அங்கிள் சதாம் என்ற பெயரில் சுமார் 62 நிமிடங்கள் ஓடக்கூடியடாக்குமென்டரி படத்தை எடுத்துள்ளார். சதாம் உசேன் குறித்த படமாகும் இது. இந்தப் படம் ஈராக்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், சோலருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது வீட்டு தபால் பெட்டியில் மிரட்டல் கடிதம் போடப்பட்டிருந்தது. அதை எழுதியவர்பெயர் குறிப்பிப்படவில்லை. கடிதத்தில், கடவுள் கருணையால் நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. படச்சுருள்களை எரித்துவிட வேண்டும். அல்லது நீ கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டும் தொனியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோலர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு முழுவதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனக்கு பாதுகாவலர் தேவை. இந்த மிரட்டல்கடிதத்தால் என்ன விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறேன். ஈராக் நாட்டினர் அங்கிள் சதாம்டாக்குமென்ட்ரிப் படத்தினால் அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இது ஒரு கோபக்கார இளைஞனின் செயலா அல்லது இதற்குப்பின்னணியில் மிகப் பெரிய அமைப்புக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் மறைவிடம்தேடிப் போகலாம் என்று நினைக்கிறேன். மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இப்படம் எடுப்பதற்காக நான்ஈராக்கில் இருந்த போது, எனக்கு அங்கேயும் பல பிரச்சனைகள் இருந்தது என்றார்.
அங்கிள் சதாம் திரைப்படம் வான்கூவர் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இப்படம் குறித்து அமெரிக்க தூதர் டேவிட் ஸ்கபர் கூறுகையில், மிகத்தைரியமாக எடுக்கப்பட்ட, துணிச்சலான படம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications