தம்பி மீது புகாரா? வருத்தப்படுகிறார் அண்ணன்
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க் வாவ் மீதுகூறப்பட்டுள்ள மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டால் அவரது சகோதரரும், ஆஸ்திரேலியஅணியின் கேப்டனுமான ஸ்டீவ் வாவ் வருத்தம் அடைந்துள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணைஅறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்சிலர் மீதும், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் மீதும் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள்கூறப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாவும் அடங்குவார். இவர் கிரிக்கெட்சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பிட்சின் தன்மை, வானிலைஆகியவை பற்றி தகவல் கொடுத்து பணம் வாங்கியதாக சிபிஐ விசாரணை அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
மார்க் வாவ் மீது கூறப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டால் அவரது சகோதர் ஸ்டீவ் வாவ்அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஆஸ்திரேலியஅணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மார்க் வாவ் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம்அளிக்கிறது. இக் குற்றச்சாட்டு ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியையே பாதித்துள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையில் மார்க் வாவுக்கு நான் வருத்தம்தான் தெரிவித்துக் கொள்ளமுடியும். பத்திரிக்கைகளில் எல்லாம் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், நான் மட்டுமல்ல எங்களது குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வருத்தத்திலும்,வேதனையிலும் உள்ளோம். இவ் விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மார்க் வாவுக்கு இப்போது நேரம் சரியில்லை. மார்க் வாவுக்கு நிறைய ஆதரவு உள்ளது. இக்குற்றச்சாட்டிலிருந்து அவர் மீண்டு வருவார்.
சிபிஐ குற்றச்சாட்டை அடுத்து கிரிக்கெட்டிலிருந்து மார்க் வாவ் ஓய்வு பெறுவாரா என்றுஎன்னால் சொல்லமுடியாது. ஏனெனில் இப்போதும் அவர் நன்றாக விளையாடி வருகிறார்.
இனிமேலும் அவர் தொடர்ந்து அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள்எழுந்தால் அது அவருக்கு நல்லதல்ல என்றார் ஸ்டீவ் வாவ்.
இதற்கிடையே, தன் மீதான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளை மார்க் வாவ் மறுத்துள்ளார்.
அதே நேரத்தில், மார்க் வாவ் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும்படி ஐ.சி.சி.ன் ஊழல்தடுப்புப் பிரிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணை நடந்தாலும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் மார்க் வாவ் கலந்துகொள்ளலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம் மாதம்23-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடர்தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications