புயலைக் கிளப்பிய வைகோ-பாலசிங்கம் சந்திப்பு
சென்னை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ, லண்டனில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்து தமிழகத்தில்பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் வைகோவின் லண்டன் பயணம் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இருப்பது,தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக கூட்டணிக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக முக்கிய கட்சி என்பதுகுறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை மில்லனியம் மாநாட்டில் கலந்து கொண்ட வைகோ,நாடு திரும்பும் வழியில், லண்டனுக்குச் சென்று பாலசிங்கத்தை சந்தித்தார். இதுதான்பொறியைக் கிளப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் எப்படி,இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆலோசகரை சந்திக்கலாம் என்றுகச்சை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி வழக்கம் போல அதிரடியாக அறிக்கைவிட்டார். வைகோ மீது சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தலைமை வகிக்கும் பிரதமர் வாஜ்பாயும், தமிழக முதல்வர் கருணாநிதியும்,வைகோவின் செயலுக்கு விளக்கம் அளிக்கக் கோரினார்.
திமுகவிலிருந்தபோது, வைகோ முன்பொருமுறை, யாழ்ப்பாணத்திற்கு ரகசியமாகசென்றபோது, அதுகுறித்துத் தனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி என்பதைநினைவு கூர்கிறார் குமரி அனந்தன்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மதிமுக தொண்டர் ஒருவரது வீட்டுதிருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. விடுதலைப் புலிகளின் சின்னத்திற்கு மத்தியில்,வைகோவின் படத்தைப் போட்டு அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மதுரை நகரைஅலங்கரித்தன. இதுவும் புழுதியைக் கிளப்பியது.
மதுரையில் நடந்த திருமண விழா ஒன்றில் வைகோ ஒருமுறை பேசுகையில்,லண்டனில் நான் பாலசிங்கத்தைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் என்று முழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பாலஸ்தீனப் போராட்டத்துக்கும், தமிழ் ஈழப்போராட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடுகேட்பது எவ்வாறு தவறில்லையோ, அதேபோல, தமிழ் ஈழம் கேட்பதிலும் தவறில்லைஎன்றார் வைகோ.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இலங்கை ராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவம்.பண்டாரவிளை முகாமில் நடந்த சம்பவம் ஒரு இனப் படுகொலை என்றும் வைகோஉணர்ச்சிகரமாக பேசினார்.
வைகோ-பாலசிங்கம் சந்திப்பை, தமிழக ராஜீவ் காங்கிரஸும் கண்டித்துள்ளது.அக்கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், நாட்டை பிளக்கவிடுதலைப் புலிகள் முயல்கின்றனர். அதற்கு வைகோ துணை போகிறார். பாலஸ்தீனபோராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் ஒப்பிடவே முடியாதுஎன்றார் அவர்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனும் வைகோவின் லண்டன்பயணம் குறித்து மறைமுகமாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் வைகோவின் பாலசிங்கம் சந்திப்பு, தமிழக அரசியலில் புதியசர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications