மாஞ்சோலை பிரச்னை.. கையில் எடுக்கிறது பு.தமிழகம்
மதுரை:
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை விரைவில் தீர்க்கக் கோரி புதிய தமிழகம் கட்சி வரும் டிசம்பர் 6 ம் தேதிபோராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாஞ்சோலை எஸ்டேட்டில் தலித் இன மக்கள் பலர் பல்லாண்டு காலமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு பல பிரச்சனைகளை அவர்கள் சந்தித்துவருகிறார்கள்.
எஸ்டேட் நிர்வாகம் அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும், இன்னமும் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியது. இதைக் கண்டித்து நவம்பர் மாதம் புதிய தமிழகம் கட்சிஅனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையத்தின் முன் தர்ணா நடத்தும்.
தாழ்த்தப் பட்டவர்களுக்காக தமிழக அரசுப்பணியில் 6000 காலியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கு தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து புதிய தமிழகம் கட்சி தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications